மாத பிதா குரு தெய்வம் என்ற வரிகளில் முன்றாவது நிலையில் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.ஒரு காலத்தில் ஆசிரியர்களை தேடிச்சென்று கல்வி கற்ற நிலை மாறி இன்று மாணவர்களை தேடி ஆசிரியர்கள் சென்று கல்வி கற்பிக்கும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.இன்றைய சூழலில் ஆசியர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை மாறி பாதுகாப்பற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனார்.10 மற்றும் 12ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களின் நிலை அனைத்தையும் விட கொடுமையானது மதிப்பெண்களை மட்டும் குறிவைத்து ஆக்கத்திறன்களை புறம் தள்ளி இயந்திரத்தனமாக மாணவர்களை தயார் செய்யும் நிலையில் உள்ளார்கள்.குழந்தைகள்
உரிமை மற்றும் நலனை முதன்மைப்படுத்தி, அரசு உருவாக்கியுள்ள விதிகளால்,
மாணவர்களிடம், ஆசிரியர்கள் மீதான பய உணர்வு குறைந்து விட்டது. பல
மாணவர்கள், போதை பாக்கு போட்டும், மது அருந்தி விட்டும், பள்ளிக்கு
வருகின்றனர். மாணவர்கள், சரியாக படிக்காததைக் கூட, கண்டிக்காமல் இருந்து
விடலாம்.ஆனால், ஒழுங்காக,
பள்ளிக்கு வராமல் இருப்பதைக் கூட கண்டிக்க முடியவில்லை. ஆசிரியைகளை,
மாணவர்கள் கேலி செய்தாலும், தட்டி கேட்க முடியவில்லை. எனவே, மாணவர்கள்
உரிமையை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ள
அரசு உத்தரவுகளை உடனே நீக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள்
பாதுகாப்பையும், அரசு உறுதிபடுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.
இதை வலியுறுத்தி,
மாநிலம் முழுவதும், இன்று , அரசு மற்றும் அரசு நிதி
உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பள்ளிகளில் கருப்பு
பட்டை அணிந்தும், பள்ளி முடிந்தவுடன், பள்ளி நுழைவாயில் முன், கண்டன
ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.இந்த அனைத்து குறைபாடுகளும் களையப்பட்டு ஆசிரியர் சமுதாயம் புத்துயிர் பெற்றால் மட்டுமே வருங்கால சமுதாயம் வளம் பெரும்..என்றும் ஆசிரியர்கள் நலனில் கல்விக்குரல் .