முகம் பார்க்கும்
கண்ணாடியின் உதவியுடன் படிப்பது போல், 1,330 திருக்குறளையும், 2ம் வகுப்பு
படிக்கும் சிறுமி எழுதி, சாதனை படைத்துள்ளார்.கோவை மாவட்டம், போத்தனூர்
செட்டிபாளையத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் ரமேஷ் - நந்தினியின் மகள் ஜனனி.
2ம் வகுப்பு படிக்கும், 6 வயது சிறுமியான இவர், முகம் பார்க்கும்
கண்ணாடியில் படிப்பதுபோல், எழுத்துகளை எழுதிப் பழகினார்.இந்நிலையில்,
பெற்றோர் வாங்கிக் கொடுத்த, 21.5 மீ., கதர் துணியில், 1,330
திருக்குறளையும், முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியால் மட்டுமே படிக்கும்
வகையில், 80 நாளில் எழுதி, சாதனை படைத்துள்ளார்.'எதிர்காலத்தில்
தமிழாசிரியை ஆக வருவேன்' என, கூறிய மாணவியை, போலீஸ் கமிஷனர் மற்றும்
ஆசிரியர்கள் பாராட்டினர்.