பாரதியாரின்
பாடல்களை வரும் 11ஆம் தேதியில்
இருந்து நாடு முழுவதிலும் உள்ள
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில்
மொழிபெயர்த்து விநியோகிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டெல்லியில்
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,பாரதியாரின்
பாடல்களை நாடு முழுவதும் இருக்கின்ற
அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்ல வேண்டும்
என்று நான் கோரிக்கை வைத்தேன்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய
தினம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்ருதி இரானியை சந்தித்து,
இதுகுறித்து கேட்டேன். நிச்சயமாக கவனம் எடுப்பேன் என்று
சொன்னார். இன்று மீண்டும் அவர்களை
சந்தித்து பேசியபோது, இன்று அவர்கள் மகிழ்ச்சியோடு
சம்மதம் தெரிவித்தார்கள். வரும் 11ஆம் தேதியில்
இருந்து நாடு முழுவதும் உள்ள
அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாரதியார் பாடல்கள் எடுத்துச் செல்லப்படும். அதுமட்டுமல்ல பாரதியாரின் பாடல்களில் கவிதை போட்டிகள், கட்டுரை
போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு
பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.