Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:
பொதுத்தேர்வு தேதி
அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து
பள்ளிகளிலும், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள்,
வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில்
சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.
பிளஸ் 2
மாணவர்களுக்கு, மார்ச் 5; பத்தாம் வகுப்புக்கு மார்ச் 19ல்,
பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுகள் வரும்
10ம் தேதி துவங்க உள்ளன.பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில்,
ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த
கல்வியாண்டில், மாநில அளவில், தரப்பட்டியலில் மாவட்டம் முன்னேறியதுடன்,
அதிக மாணவர்களும், ரேங்க் பெற்றனர்.முழு பாடத்தையும் மாணவர்கள்
எழுதவுள்ளதால், தற்போது அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டு,
மாதிரித் தேர்வுகள் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,
கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் மீது, ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி
வருகின்றனர். இத்துடன், காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சிறப்பு
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி
அதிகாரி தலைமையில், தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர் உள்ளடக்கிய சிறப்புக்குழுவினர், பள்ளிகளில்
மாணவர்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள்
குறித்தும், ஆய்வுகள் செய்ய துவங்கியுள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை தயார்படுத்துவதில்,
ஆசிரியர்கள் முழுக் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை போன்று,
நடப்பு கல்வியாண்டிலும், அரசு பள்ளிகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த,
நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தனியாகவும், கற்றலில் பின்தங்கிய
மாணவர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி
அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், செயல்படும் பள்ளிகள்
தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, தரப்பட்டியலில், முன்னேற முனைப்புடன்
செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டும் விதத்தில்
உள்ளது.''பொதுவாக, மாணவர்கள் பள்ளிக்கு அதிகப்படியான விடுப்பு எடுப்பதன்
விளைவாகவே, தேர்ச்சி விகித பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடியாமல்
போகிறது. பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, அதிகப்படியான விடுப்பு
எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை, நேரில் அழைத்து பேசியுள்ளோம்.
சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வு முடிந்த பின்,
மாணவர்களின் நிலை குறித்து, ஆய்வு செய்து, மீண்டும் பயிற்சியின் தன்மை
அதிகரிக்கப்படும்,'' என்றார்.
தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தக் கூடாது!
'தேர்ச்சி விகிதத்தை
மட்டும், நோக்கமாக கொண்டு செயல்படும் சில பள்ளிகள், பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பின்தங்கிய மாணவர்களை, தனித்தேர்வர்களாக எழுத
கட்டாயப்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள்
மீது பெற்றோர், மாணவர்கள், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் முதன்மை
கல்வி அலுவலகத்தை அணுகி, புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு, பெறப்படும்
புகார்கள் உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








