விழுப்புரம் மாவட்டம்
சின்னசேலம் வட்டம் தெங்கியாநத்தம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13.01.2017 அன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்க கூட்டத்துடன் பள்ளியின் தலைமை
ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் தலைமையில் பொங்கல் விழா இனிதே
ஆரம்பமானது.6,7,8,9,10 வகுப்புகளில் வகுப்பாசிரியர்களின் தலைமையில்
சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வைக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே
இடத்தில் வைக்கப்பட்டு,கரும்பு, மஞ்சள்,மாங்கொத்து மற்றும் பொங்கலுக்கு
படைக்கப்படும் அனைத்து பொருட்களும் வைத்து,மாணவமாணவியர்கள் அனைவரும்
பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு கதிரவனுக்கு மற்றும் கால்நடைகளுக்கு நன்றி
தெரிவித்தனர். இவ்விழாவிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களின்
பாரம்பரிய உடைகளான வேட்டி,சட்டை மற்றும் ஆசிரியைகள் காட்டன் புடவைகள்
அணிந்திருந்தனர்.அனைவரும் ஒரு சேர இறைவனிடம் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் 100சதவிதம் தேர்ச்சி பெற இறைவனிடம் வேண்டப்பட்டது.இந்நிகழ்வின்
வாயிலாக மாணவர்களுக்கு அன்பு சகோதரத்துவம் தமிழர்களின் பண்பாடுகளான
விருந்தோம்பல்,விட்டுகொடுக்கும்மனப்பான்மை,வேற்றுமையில் ஒற்றுமை போன்ற
கருத்துக்களை மாணவர்கள் அறியும் வண்ணம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
எடுத்துரைத்தனர்.
இந்த பொங்கல் விழாவில் மற்றும் ஒரு நிகழ்வாக 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு 6முதல் 8வரை ஒரு பிரிவாகவும், 9மற்றும் 10ஆம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், பிரித்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.முதல் நிலை,இரண்டாம் நிலை மற்றும் முன்றாம் நிலையென 90 பரிசுகள் ரூ 2000 அளவில் தலைமை ஆசிரியர் அவர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி மாலை 04:45 மணியளவில் இந்த பொங்கல் விழா கொண்டாட்டம் தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது.