'பிளஸ் 2
தேர்வு மையங்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு
மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என மதுரை ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.மார்ச்
5ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. தற்போது தேர்வு மையங்களில்
பணியாற்றுவதற்கான ஆசிரியர் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடக்கின்றன. முதன்மை
கண்காணிப்பாளர் பணிக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், துறை அலுவலர்
பொறுப்புக்கு முதுநிலை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் மற்றும்
பறக்கும்படை குழுவிற்கு முதுநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்
நியமிக்கப்படுவர். இதில் ஆசிரியர், அவரது மகன் ஒரே பள்ளியில் இருக்கும்
பட்சத்தில் அந்த ஆசிரியருக்கு அந்த குறிப்பிட்ட மையத்தில் பணி
ஒதுக்கக்கூடாது. இதுபோன்று மேலோட்டமான விதிகள் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக விருப்பப்பட்ட தேர்வு மையத்தை ஓர் ஆசிரியர் தேர்வு
செய்யக்கூடாது போன்ற விதிகள் மீறப்படுவதாக தற்போது குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
கல்வி
அதிகாரிகளின் கவனத்தையும் மீறி கீழ்மட்ட அளவில் சில ஊழியரை ஆசிரியர்கள்
கைக்குள் போட்டு விரும்பிய மையத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பள்ளிக்கு
அல்லது குறிப்பிட்ட ஒரு மாணவனுக்கு சாதகமாக அந்த ஆசிரியர்கள்
நடந்துகொள்வதாக சர்ச்சை ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு
மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்
பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு கீழ் பணியாற்றும் சில ஊழியர்களை ஆசிரியர் சிலர் 'சரி'
செய்து விரும்பிய மையங்களை தேர்வு செய்து விடுகின்றனர். இது தவறான
செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே குலுக்கல் முறையில் ஆசிரியர்கள்
தேர்வு செய்து நியமிக்க வேண்டும். இதை தேர்வுத்துறை இயக்குனரிடமும்
வலியுறுத்தியுள்ளோம். இதை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.