ஏப்ரல் 1 முதல் 3ஆம்
தேதி வரை
இந்தியாவின் பல பகுதிகளில் மஹாவீர் ஜெயந்தி
மற்றும் புனித
வெள்ளியின் காரணமாக பொதுத்துறை மற்றும் கூட்டுறவு
வங்கிகள் மூடப்படுகிறது.
இதனை தொடர்ந்து
ஏப்ரல் 4 மற்றும்5ஆம் தேதிகள்
சனி, ஞாயிற்றுக்கிழமை
என்பதால் தொடர்ந்து
5 நாட்களுக்கு நாட்டில் வங்கி சேவை பாதிக்கப்படும்
நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் 1
வருடாந்திர வங்கி கணக்கை
முடிக்கும் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி
நாட்டில் அனைத்து
தனியார் மற்றும்
பொதுத்துறை வங்கிகளும் முடப்படுகின்றன.
5 நாட்கள்
ஏப்ரல் 2ஆம் தேதி
மஹாவீர் ஜெயந்தி,
ஏப்ரல் 3ஆம்
தேதி புனித
வெள்ளி, ஏப்ரல்
4ஆம் தேதி
சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே
வங்கி செயல்படும்.
ஏப்ரல் 5ஆம்
தேதி ஞாயிற்றுக்கிழமை.
எனவே முழுமையான
வங்கிச் சேவை
மார்ச் 31ஆம்
தேதிக்கு பின்
ஏப்ரல் 6ஆம்
தேதியன்று தான்
துவங்கும்.
தமிழ்நாடு
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா
மற்றும் உத்தரப்
பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் ஏப்ரல் 1, 2, 3 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டள்ளது
என இந்திய
வங்கிகள் அமைப்பு
தனது இணைய
பக்கத்தில் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் ஏப்ரல்
2 வேலை நாளாகவும்,
மீதமுள்ள மாநிலங்களில்
ஏப்ரல் 3ஆம்
தேதியன்று வேலை
நாளாக இருக்கும்
என இவ்வமைப்பு
தனது செய்திக்குறிப்பில்
தெரிவித்தது.
இண்டர்நெட் பாங்கிங்
ஏப்ரல் 1 முதல் 5ஆம்
தேதி வரையிலான
காலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட்
பாங்கிங், மொபைல்
பாங்கிங் மற்றும்
ஏடிஎம் சேவைகளை
24 மணிநேரமும் பெறலாம் எனவும் இந்திய வங்கிகள்
அமைப்பு கூறுகிறது.







