12 முறை மணியோசை
பிளஸ் 2 தேர்வில், 12 முறை மணி அடித்து, மாணவ, மாணவியருக்கு எச்சரிக்கை மற்றும் அறிவிப்புசெய்யப்பட்டன. ஒருமுறை மணி அடித்தால் என்ன அர்த்தம் என்று, தேர்வு மையத்தில் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.அதன் விவரம்:
9:45 தேர்வர்கள் அறைக்குள் செல்லலாம்
9:55 மாணவர் முன்னிலையில் வினாத்தாள் உறை பிரிப்பு
10:00 வினாத்தாள் வழங்கலாம்
10:10 விடைத்தாள் வழங்கலாம்
10:15 தேர்வு எழுத துவங்கலாம்
1:10 தேர்வு முடிவதை எச்சரித்தல்
1:15 தேர்வு முடிந்தது; விடைத்தாளை ஒப்படைக்கலாம்







