இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக ஒதுக்கப்படும் தொகையை
மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என, இஸ்ரோ
முன்னாள் இயக்குனர் பேராசிரியர் வேதாசலம் தெரிவித்தார்.விழுப்புரம் அரசு
பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான 'அக்னிமித்ரா' என்ற தலைப்பில் தொழில்
நுட்ப கருத்தரங்கம், நடந்தது.
இக்கருத்தரங்கை துவக்கி வைத்து,
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் வேதாசலம் அளித்த பேட்டி:இந்திய அளவில் கடந்த 20
ஆண்டுகளாக தொழில் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு
வருகிறது. பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., உள்ளிட்ட ஏவுகணை தயாரிப்பில்
உலகளவில் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.அமெரிக்கா,
ஜி.பி.எஸ்., வசதியை உருவாக்கி உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளும் வெற்றி
கண்டுள்ளன. இந்தியாவும், பி.எஸ்.எல்.வி.-27 உள்ளிட்ட 4 ஏவுகணைகளை
செலுத்தினால், இந்த வசதியை பெற்று விடும்.நேவிகேஷன் சேட்டிலைட், இன்னும்
ஒரு சில வாரங்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மற்ற மூன்று ஏவுகணைகளும்,
இந்தாண்டு இறுதிக்குள் செலுத்தப்பட உள்ளன.
இதன் பிறகு,
நமது நாடு, இந்த வசதியை பெற்றுவிடும்.இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பை,
பேராசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் மேல்நிலை
படிப்பு முடிந்து, வேலைக்கு செல்வதில் தான் ஆர்வம்
செலுத்துகின்றனர்.அறிவியல் ஆராய்ச்சி செய்ய, மாணவர்கள் அதிகளவில் முன் வர
வேண்டும். மத்திய அரசு, அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆண்டுதோறும் 460 கோடி
ரூபாயை செலவிடுகிறது. இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் இந்தியாவின் புகழை மென்மேலும்
உயர்த்த மாணவர்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு வேதாசலம் தெரிவித்தார்.







