பிளஸ்–2 தேர்வு 5–ந் தேதி தொடங்குகிறது அரியலூர் மாவட்டத்தில் 7,587 பேர் எழுதுகின்றனர் செல்போன், கால்குலேட்டர் கொண்டு வர மாணவ–மாணவிகளுக்கு தடை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பிளஸ்–2 தேர்வு 5–ந் தேதி தொடங்குகிறது அரியலூர் மாவட்டத்தில் 7,587 பேர் எழுதுகின்றனர் செல்போன், கால்குலேட்டர் கொண்டு வர மாணவ–மாணவிகளுக்கு தடை:

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு வருகிற 5–ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7,587 பேர் எழுதுகின்றனர். தேர்வின் போது செல்போன், கால்குலேட்டர் கொண்டு வர மாணவ– மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்–2 தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 9–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடந்தது. கருத்தியல் தேர்வு வருகிற 5–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 63 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகள் 26 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 3,281 மாணவர்களும், 4,306 மாணவிகளும் என மொத்தம் 7,587 மாணவ–மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்விற்கான வினாத்தாள்கள் அரியலூர், உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய போலீசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர், தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்கள் காப்பாளர்
களாக நியமனம் செய்யப்
பட்டுள்ளனர்.

தலைமையாசியர்களுக்கு பயிற்சி

தேர்வு நடைபெறும் 26 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 70 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தடை அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 5 வழித்தடை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் அவர்கள் பணி செய்வார்கள். தேர்வு மையத்தில் பணிபுரிவதற்கு போதுமான அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை பொதுத்தேர்வை சிறப்பாக நடத்திட தேர்வு நடைமுறைகள் குறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த 25–ந் தேதி தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. கருத்தியல் தேர்வு வருகிற 19–ந் தேதி முதல் அடுத்த மாதம் 10–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 152 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் 33 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 5,729 மாணவர்களும், 6,205 மாணவிகளும் என மொத்தம் 11,934 மாணவ– மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதும் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி., பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வு கூடத்தில் செல்போன், கால்
குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி

தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கும், மாணவ–மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வுக்கு வருவதற்கு ஏதுவாக போதிய பஸ் வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீசாரை பணியமர்த்தி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H