பிளஸ்–2 தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 9–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடந்தது. கருத்தியல் தேர்வு வருகிற 5–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 63 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகள் 26 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 3,281 மாணவர்களும், 4,306 மாணவிகளும் என மொத்தம் 7,587 மாணவ–மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
களாக நியமனம் செய்யப்
பட்டுள்ளனர்.
தலைமையாசியர்களுக்கு பயிற்சி
தேர்வு நடைபெறும் 26 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 70 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தடை அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 5 வழித்தடை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் அவர்கள் பணி செய்வார்கள். தேர்வு மையத்தில் பணிபுரிவதற்கு போதுமான அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை பொதுத்தேர்வை சிறப்பாக நடத்திட தேர்வு நடைமுறைகள் குறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த 25–ந் தேதி தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. கருத்தியல் தேர்வு வருகிற 19–ந் தேதி முதல் அடுத்த மாதம் 10–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 152 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் 33 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 5,729 மாணவர்களும், 6,205 மாணவிகளும் என மொத்தம் 11,934 மாணவ– மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதும் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி., பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வு கூடத்தில் செல்போன், கால்
குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி
தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கும், மாணவ–மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வுக்கு வருவதற்கு ஏதுவாக போதிய பஸ் வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீசாரை பணியமர்த்தி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.








