Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டது பிளஸ்–2 ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் கருத்து:
எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டது பிளஸ்–2 ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் கருத்து:
பிளஸ்–2 பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் மிக எளிதாக
இருந்ததாகவும், எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மாணவிகள்
கூறினர்.பிளஸ்–2 பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள்
தேர்வு நடந்தது. சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
தேர்வு எழுதிய மாணவி ஒருவர் கூறியதாவது:–
நம்பிக்கை
ஆங்கிலம் 2–ம் தாள் எப்படி இருக்குமோ? என்ற ஒரு வித பயத்துடனே
தேர்வுக்கு வந்தேன். ஆனால் வினாத்தாளை கையில் வாங்கிய உடனேயே ஒரு சில
கேள்விகளை தவிர மற்ற அனைத்தும் படித்திருந்த கேள்விகள்
கேட்கப்பட்டிருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிலும் குறிப்பாக 3
மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாகவே கேட்கப்பட்டிருந்தது. இதனால்
நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து
கேள்விகளும் பாடத்திற்கு உள்ளேயே இருந்து கேட்கப்பட்டது. மொத்தத்தில்
தேர்வு எளிதாகவே இருந்தது.
இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
ஆசிரியர்கள் இல்லை
சென்னையில் தேர்வு எழுதிவிட்டு வந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் கூறியதாவது:–
தனியார்
பள்ளி மாணவர்களை போன்று நாங்கள் நன்றாக தேர்வு எழுதவில்லை. காரணம்
பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம்
பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் மருத்துவ
விடுமுறையிலும் சென்றுவிட்டனர்.
மாணவர்களே தானாக படித்துக்கொண்டு
தேர்வை சுமாராகத்தான் எழுதி உள்ளோம். வருங்காலங்களிலாவது அரசு பள்ளிகளில்
படிக்கும் பிளஸ்–2 மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், அனைத்து
பாடப்பிரிவுக்கும் ஆசிரியர்களை நியமித்து, தனியார் பள்ளிக்கு இணையான
கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்க கல்வித்துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








