அண்ணா பல்கலைக்கழக தொழில் முனைவோர்
மேம்பாடு நிறுவனம், "சர்ப்ரைஸ் சொல்யூஷன்ஸ்' ஆகியவை இணைந்து நடத்தும்
கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் போட்டிக்கு வரும் 25-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து "சர்ப்ரைஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.கெüதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள்
பட்டப்படிப்பு முடித்து வெளிவருகின்றனர். அவர்கள் அனைவருக்கும்
வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. புதிய தொழில்
முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் அதற்கு தீர்வு காண முடியும்.
ஆகையால், கல்லூரி மாணவர்களிடம் சுயதொழில் ஆர்வத்தை
ஊக்குவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து "தோனி 15' என்ற
போட்டியை நடத்துகிறோம். அதில் பங்கேற்க 10 பேர் கொண்ட ஒரு குழுவாக
மாணவர்கள், மார்ச் 25-ஆம் தேதிக்குள் www.dhoni2015.com என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த ஒவ்வொரு குழுவுக்கும் முதலீடாக ரூ.1,000
போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்படும். அந்தத் தொகையைக் கொண்டு,
மாணவர்கள் சென்னையின் குறிப்பிட்ட பகுதியில் வரும் மார்ச் 29-ஆம் தேதி
முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை சுய தொழிலில் ஈடுபட வேண்டும்.
இந்தத் தொகையை சுயதொழில் மூலம் அதிக தொகையாகப்
பெருக்கும் முதல் மூன்று குழுக்களுக்கு முறையே முதல் பரிசாக ரூ.50 ஆயிரம்,
இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மட்டுமே
இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரே கல்லூரியில் இருந்து பல
குழுக்கள்கூட பங்கேற்கலாம். இதுவரை 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு
செய்துள்ளன என்றார்.








