கேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் பேருந்து
சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.கேரள மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக
அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு
விடுத்திருந்தனர்.
இதையடுத்து, கேரள மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு
அடைப்பு காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, கடைகள்
மூடப்பட்டிருந்தன. மேலும் பேருந்து சேவையும் முடங்கியதால் மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம்: கேரளத்தில் இடதுசாரி கட்சிகள் நடத்திய
முழு அடைப்பு போராட்டத்தால் குமரி மாவட்டத்திலிóருந்து கேரளத்துக்குச்
செல்லும் அரசுப் பேருந்துகள் சனிக்கிழமை களியக்காவிளை வரை வந்து திரும்பிச்
சென்றன.``
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக
அரசுப் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து நிலையம் வந்து நாகர்கோவிலுக்கு
திரும்பிச் சென்றன.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை, பெங்களூரு,
புதுச்சேரி, வேலூர், வேளாங்கண்ணி, ஊட்டி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு
இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து
நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
போடி: கேரளத்தில் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு,
தமிழகத்தைச் சேர்ந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போடி மெட்டு மலைச்சாலை
வழியாக கேரளத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போடி வழியாக, கேரளத்துக்கு
செல்ல வேண்டிய சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் மாலை வரை முந்தல் சோதனை
சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு, பின் மாலையில் அனுமதிக்கப்பட்டன.








