வாக்காளர்கள் தகவலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி ஏப்ரல் முதல் வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வாக்காளர்கள் தகவலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி ஏப்ரல் முதல் வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி:

வாக்காளர்களுக்கான தகவலுடன் அவர்களின் ஆதார் நம்பரை இணைப்பதற்காக வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி, ஏப்ரலில் தொடங்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
மிகப் பெரிய பணி இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:–

வாக்காளர்களின் தகவலுடன் அவர்களின் ஆதார் எண்களையும் இணைக்கும் பணி மிகப்பெரியது. 3 நிலைகளாக இந்தப் பணிகளை செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். முதலில் இந்தப் பணிகளுக்கான பயிற்சியை அனைத்து அலுவலர்களுக்கும் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான சிறிய அளவிலான புத்தகங்களை தயாரித்து வைத்துள்ளோம். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், சட்டமன்ற தொகுதி அளவிலும், இறுதியாக வாக்குச்சாவடி அளவிலும் அந்தந்த அளவிலான அதிகாரிகளுக்கு பயிற்சிகள் நடத்தப்படும். இதற்கான எனது தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்பயிற்சி மாவட்ட கலெக்டருடன் 13–ந் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறேன். மாநில அளவில் அதிகாரிகளுக்கு 19–ந் தேதி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் அதிகாரிகளுக்கு 24 மற்றும் 25–ந் தேதிகளிலும், வாக்குச்சாவடி அளவில் அலுவலர்களுக்கு 30, 31, ஏப்ரல் 1–ந் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 100–க்கும் மேலாக உள்ளது. ஆதார் எண்களை சேர்ப்பது குறித்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் ஈடுபடுவர். இதற்காக அவர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படும்.
வீடு, வீடாக விண்ணப்பம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தத் திட்டம் குறித்த பயிற்சி 20–ந் தேதிக்குள் தனியாக நடத்தி முடிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தவிர மற்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் மீது 5 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் தொடர்பாக வீடு, வீடாகச் சென்று சரிபார்ப்பு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.
ஆதார் எண்ணை வாக்காளர் தகவலுடன் இணைப்பதற்கான விண்ணப்பங்களை, பயிற்சிகள் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் அலுவலர்கள் வீடு, வீடாக வந்து வழங்குவர்.
செல்போன் எண் சேர்ப்பு தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவை இணைந்து நடத்தும் பொது சேவை மையங்கள், சிறப்பு மின் ஆளுமை முகாம் ஆகியவை மூலமாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 50 லட்சம் வாக்காளர்களின் செல்போன் தொடர்பு எண்கள் உள்ளன. அவை அனைத்தும் வாக்காளர் தகவலுடன் சேர்க்கப்படும்.
வாக்காளரிடையே ஆதார் எண் இணைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, ஆல் இந்தியா ரேடியோ, பத்திரிகைகள் என அனைத்துத் தரப்பு மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
சிறப்பு முகாம்கள் ஆதார் எண் சில இடங்களில் வழங்கப்படுவதில் தாமதம் உள்ளது. எனவே அங்கு ஆதார் எண்ணை வாக்காளரின் தகவல்களுடன் இணைக்கும் சிறப்பு முகாம்கள் நடக்கும்போது, அதே இடத்தில் ஆதார் எண்களை வழங்கும் முகாம்களையும் நடத்துவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியின் அனுமதி கிடைத்துள்ளது.
எனவே, எங்கெல்லாம் குறைவாக ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ஆதார் எண் வழங்கும் சிறப்பு முகாமும் நடத்தப்படும். ஆதார் எண் பெறாதவர்கள், வாக்காளர் தகவலுடன், ஆதார் அட்டையை பெறுவதற்கான விண்ணப்ப நம்பரை (இ.ஐ.டி. எண்) இணைக்கலாம். ஆதார் எண் வந்த பிறகு அது அந்த வாக்காளரின் தகவல்களுடன் இணைக்கப்பட்டு விடும்.
ஆதார் எண் வழங்கும் பணியை துரிதப்படுத்த தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H