இதுகுறித்து, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
படித்து விட்டு வேலை தேடுவோருக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே, வேலை
வாய்ப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. பதிவு செய்ய பிறப்புச்சான்று,
கல்விச்சான்று, ஜாதிச்சான்று, ரேஷன் கார்டு அவசியம். எதுவுமே
படிக்காவிட்டால், ஜாதிச்சான்று, பிறப்புச்சான்று, இருப்பிடச் சான்றாக ரேஷன்
கார்டு இருந்தால் பதிவு செய்யலாம். உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு;
காவலாளி பணிக்கு, குறைந்த பட்சம், ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
படிப்பே இல்லாமல் பதிவு செய்யலாம்; அதனால், பெரிதாக எந்த பயனும்
கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ''துப்புரவுப் பணிக்கு கல்வித்தகுதி தேவையில்லை. உள்ளாட்சிகளில், சுவர்ண ஜெயந்தி பணி, தனியாரில், 'அவுட்சோர்சிங்' முறையில் துப்புரவு பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். அப்படி ஒரு பரிந்துரை கோரப்பட்டால், பரிந்துரைப் போம்'' என்றார்.நன்றி தினமலர்