தேர்வு பகல் 12 மணிக்கு முடிந்து வெளியே வந்த பெரம்பூரைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
சரியாக அச்சிடப்படாத வரைபடம்
ஆனால் 53 மற்றும் 54 எண் கொண்ட கேள்விகள் வரைபடத்திற்கான கேள்விகள் ஆகும். 53-வது கேள்வி வரலாறு பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அது 5 மதிப்பெண்ணுக்கு உரியது. ஆனா£ல் சரியாக அச்சிடப்படவில்லை. வரைபடம் தெளிவாக இல்லை. மேலும் 54-வது கேள்வி புவியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வரைபட வினா ஆகும். அந்த வினாவுக்கு 10 மதிப்பெண்கள். இந்த வரைபடமும் சரியாக அச்சிடப்படாமல் தெளிவு இல்லாமல் இருந்தது. அதனால் கேள்வியில் 10 இடங்களை குறிக்க என்று கேட்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அந்த இடங்களை சரியான இடத்தில் குறிப்பது சிரமமாக இருந்தது. இந்த 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் சிரமப்பட்டோம். மிகவும் குழப்பமாக இருந்தது.
அச்சிடும்போது சரியாக அச்சிட்டால் அந்த பிரச்சினை இல்லை. இவ்வாறு அந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களில் இப்படி வினாத்தாள் சரியாக அச்சிடப்படாமல் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்திருக்கிறது.
கொண்டாட்டம்
நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவடைந்தது. அதனால் மாணவர்கள் பலர் மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் சாயம் பூசி மகிழ்ந்தனர். சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.








