ஆபத்து கால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசித் தேதியாகும்.
108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ
நிறுவனத்தின் சார்பில் ஆபத்து கால சேவை குறித்த இரண்டு ஆண்டு கால முதுநிலை
பட்டயப்படிப்பு ஹைதராபாதில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கு 2015-ஆம் ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தாவரவியல், உயிரி வேதியியல்,
நுண்ணுயிரியல், உயிரிதொழில்நுட்பம், செவிலியப் படிப்பு, இயன்முறை
மருத்துவம், அறிவியல் தொடர்பான படிப்புகள், இந்திய முறை மருத்துவமான
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி
உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.emri.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம்
தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 21-ஆம் தேதி நுழைவுத் தேர்வு
நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல், உடல் தகுதித் தேர்வு
ஆகியவை நடைபெறும்.








