போராட்டத்தில் தமிழகத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1986-88 வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும், 2004-06 வரை தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தாய் மொழி
தாய்மொழியான தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண்-266-ஐ திருத்தம் செய்து தமிழ்பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை நீக்கிவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தொடக்க பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு அனைத்து பள்ளிகளும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை தாய் மொழியாக தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த , லட்சுமிநாராயணன், முருகையன், அருள்வில்லியம், தங்க.சேகர், பரமசிவம், காந்தி, முருகேசன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.








