4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6-ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பர்.

நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

சென்னையில் எங்கே பதிவு செய்யலாம்? சென்னை (தெற்கு கல்வி மாவட்டம்)- அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. தபால் நிலையம் அருகில், அரும்பாக்கம். ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம் (சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்).

சென்னை (மத்திய கல்வி மாவட்டம்) - சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம். ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி, 4-ஆவது பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு (மலர் மருத்துவமனை அருகில்).

சென்னை (கிழக்கு கல்வி மாவட்டம்) - கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, வண்ணாரப்பேட்டை (ரெய்னி மருத்துவமனை அருகில்). கேஆர்சி ஏஆர்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் (ராயபுரம் பாலம் அருகில்).

சென்னை (வடக்கு கல்வி மாவட்டம்) - ஈஎல்எம் ஃபேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம். பெனடிக் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி (வேப்பேரி காவல் நிலையம் அருகில்).



நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்



ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 2 மதிப்பெண், 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 4 மதிப்பெண், 4 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 8 மதிப்பெண், 10 ஆண்டுகள், அதற்கு மேல் காத்திருப்போருக்கு 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண், இளங்கலைப் பட்டப் படிப்பு, அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். தனியார், அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண்கள்.

மேலும், நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H