தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்–2
பணியிடங்களுக்கு ஜூலை மாதம் 26–ந்தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இந்த
தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது.
மனிதநேய மையம்
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தும் ‘மனிதநேயம்
ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்’ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட மத்திய, மாநில
அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை
மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 2,235 மாணவ–மாணவிகள் வெற்றிபெற்று மாநில
மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
தற்போது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 பணிக்கு
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 26–ந்தேதி நடக்க உள்ள எழுத்து
தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் திறம்பட பயிற்சி அளிக்க
உள்ளது.
இலவச பயிற்சி
இந்த தேர்வு எழுத உள்ள மாணவ–மாணவிகள் அனைவரும் எமது கட்டணமில்லா
பயிற்சி பெற www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து விட்டு
www.saidais.com என்ற மனிதநேய இணையதளத்தில் Register For TNPSC GrII Exam
2015 என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்துகொள்ளும் அனைத்து
மாணவ–மாணவிகளுக்கும் தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட
உள்ளது என்று மனிதநேய மையத்தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்
ராஜேஸ்வரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







