தேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு ஒரு அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.








