பெங்களூரு:கன்னடத்தில் பாடம் கற்பிக்க அனுமதி பெற்று, ஆங்கிலத்தில்
கற்பித்த, மாநிலத்தின், 696 தனியார் துவக்க பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வமாக
ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்க, கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.மாநில அரசு,
1994ல் மொழி கொள்கையை வடிவமைத்த பின், பள்ளிகள் துவங்கப்பட்டன. மாநில
அரசின் இந்த மொழி கொள்கையை, 2014 மே 6ம் தேதி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து
உத்தரவிட்டது.இதனால், கர்நாடகா உயர்நீதிமன்ற படியேறிய
தனியார் பள்ளி நிர்வாகங்கள், கன்னட மொழி பள்ளியை, ஆங்கில மொழி பள்ளியாக
மாற்ற, அனுமதிஅளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தன.விசாரணை நடத்திய
உயர்நீதிமன்றம், கடந்த பிப், 27ம் தேதி, தற்போதுள்ள கன்னட பள்ளிகளை, ஆங்கில
பள்ளிகளாக அங்கீகரிக்கும்படி, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மே 20ம்
தேதிக்குள் அனுமதி அளிக்கும்படியும், கல்வித்துறைக்கு காலக்கெடு விதித்தது.
இதையடுத்து, மாநிலத்தின், 696 தனியார் பள்ளிகளுக்கு,
ஆங்கிலம் கற்பிக்க கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு, மைசூரு
மாவட்டங்களில், ஆங்கில பள்ளிக்கு அனுமதி கேட்டு, 926 பள்ளிகள்
விண்ணப்பித்தன. இதில், 277 பள்ளிகள் முழுமையான தகவல்களை தெரிவிக்காததால்,
இப்பள்ளிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும்படி, அதிகாரிகளுக்கு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.







