இது குறித்து எழும்பூரில் உள்ள கல்லூரியில் விண்ணப்பம் வாங்க வந்த மாணவிகளின் பெற்றோர் கூறியது: விண்ணப்பிக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்பது சாத்தியமில்லாதது. எனவே, குறைந்தபட்சம் 3 கல்லூரிகளுக்காவது விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளோம்.
ஆனால், கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக் கொள்கின்றனர். கல்லூரிக்குக் கல்லூரி கட்டணம் மாறுபடுகிறது. இதனால், வசதி குறைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே, அனைத்துக் கல்லூரி விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.








