நன்றி சிவ அனந்தகிருஷ்ணன் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற சுமார் 130-140 கேள்விகள் மட்டுமே பொதுவாக தகுதி நிலையாக இருந்துள்ளது. எனவே பொதுத் தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் கணிதம்/திறனறி கேள்விகளுக்கு (மொத்தம் 125 ) மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எளிதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெறலாம். இங்கே நீங்கள் 200க்கு /200 எடுத்தாலும் அது வீண் தான். முதல்நிலைத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள போவதில்லை. எனவே பொது அறிவில் உங்கள் தலையை போட்டு முட்டோ முட்டென்று முட்டாதீர்கள்








