அறிவு, கலாசாரத்தை மட்டும் போதிப்பவர்களாக இல்லாமல், மாற்றத்துக்கான காரணிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இளைஞர்களிடத்தில் முழுமையான வளர்ச்சியை ஆசிரியர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் தொடர்பான முழுமையான அறிவையும் நல்ல உடல், மன நலத்தையும் பெற்றிருக்க வேண்டும். அறிவை மட்டும் புகட்டாமல், நல்லொழுக்கத்தையும் கல்விமுறை வழங்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது ஆசிரியர்களின் கடமையாகும்.
தற்போது சில ஆசிரியர்கள் நன்னெறியில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதை ஆசிரியர்கள் சமூகம் கட்டுப்படுத்தும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தலைவர் ராம்பால் சிங், பொதுச் செயலாளர் கமல காந்த் திரிபாதி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் தலைவர் கோ. காமராஜ், பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், பொருளாளர் அ. ஜோசப் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








