சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
100 அடி உயரம்
தேசிய கொடி பொதுவாக பகலில் மட்டுமே பறக்கவிடப்படும். மாலை 6 மணிக்கு
அரசு அலுவலகங்களில் பறக்கும் தேசிய கொடிகள் இறக்கப்படும். ஆனால் இரவிலும்
தேசிய கொடிகள் பறப்பதற்கு சில இடங்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி
வழங்குகிறது.இதுபோல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி
நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில் 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம்
அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில் 30 அடி அகலமும், 20 அடி உயரமும்
கொண்ட பிரமாண்டமான மூவர்ண தேசிய கொடியை விமான நிலைய இயக்குனர் தீபக்
சாஸ்திரி நேற்று ஏற்றிவைத்தார்.மேலும் படிக்க..







