தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச்
சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) சென்னை
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக அரங்கில்
வெளியிடப்படுகிறது.
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி முன்னிலையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 12 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்.
படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 32,184 மாணவர்களுக்கு ஏற்கெனவே சம
வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு
உரிய முக்கியப் பாடங்களான உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றில்
மாணவர்கள் பெற்ற மறு கூட்டல்-மறு மதிப்பீடு மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்து
விட்டது.மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி முன்னிலையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 12 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று, மொத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 32,184 விண்ணப்பங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதியான விண்ணப்பங்கள் குறித்த எண்ணிக்கை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.







