அரசு எம்.பி.பி.எஸ்.: 2,257 இடங்களும் நிரம்பின: 544 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசு எம்.பி.பி.எஸ்.: 2,257 இடங்களும் நிரம்பின: 544 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு:

சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 இதேபோன்று 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கிய எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) முடிவுக்கு வநத்து.
 544 பழைய மாணவர்கள்: கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு (2015) பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
 எனினும் உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் தினமும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் எவ்வளவு பேர் பழைய பிளஸ் 2 மாணவர்கள் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர். முதல் கட்டக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள 2,257 இடங்களில் தேர்வான மாணவர்களில் 544 பழைய மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளதாக தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசி நாள் கலந்தாய்வு: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வின் நிறைவு நாளான வியாழக்கிழமை (ஜூன் 25), தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 367 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 26 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் 341 மாணவர்கள் பங்கேற்றனர்.
 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமிருந்த 84 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மீதமிருந்த 114 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மீதமிருந்த 16 பி.டி.எஸ். இடங்கள் அனைத்தையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். மொத்தம் 214 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
காத்திருக்கும் 741 மாணவர்கள்: கலந்தாய்வின் நிறைவு நாளான வியாழக்கிழமை, தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் அல்லது சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காததையடுத்து, வேண்டுகோளுக்கு இணங்க 127 மாணவர்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டன. எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவில், கடந்த 7 நாள்களில் சேர்த்து மொத்தம் 741 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சேர்க்கைக் கடித தகவல் எப்போது?
 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வாகியுள்ள 2,939 மாணவர்கள் சேர்க்கைக் கடிதத்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 முதல் கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யாருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
 கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராக இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
 இன்னும் சில தினங்களில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் (இரண்டு பேர் கொண்ட அமர்வு) தீர்ப்பை அளித்தவுடன், குறுந்தகவல் மூலம் தேர்வான அனைத்து 2,939 மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் குறித்த தகவல் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வான உரிய மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் உடனடியாகச் சேர வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கட்-ஆஃப் என்ன?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், அரசு எம்.பி.பி.எஸ், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., அரசு பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
 கட்-ஆஃப் அட்டவணை விவரம்:

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H