தலித் பழங்குடியின மாணவர்கள் வரும் 27ஆம் தேதி, சென்டாக் கலந்தாய்வில்
பங்கேற்கலாம் என, சென்டாக் தலைவர் ராகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.இது
குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்டாக் அலுவலகத்தில்
வியாழக்கிழமை (25.6.15) காலை 8 மணி முதல் எம்.பி.பி.எஸ். மற்றும்
பி.டி.எஸ். பாடப் பிரிவுகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களுக்கு அப்பாடப் பிரிவுகளில்
சேர்க்கை அளிப்பது குறித்து ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை
சென்டாக் பெறவில்லை என்பதால் அட்டவணை இன (SC) மாணவர்களுக்கான சேர்க்கை
இடங்களுக்கான ஒதுக்கீடு மட்டுமே 27.6.15 சனிக்கிழமை காலை 9 மணி முதல்
நடைபெறும்.
25.6.15-ல் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள எஸ்.சி.
மாணவர்கள், அன்றையதினமே அவர்களின் தகுதிக்கு இணங்க பொதுப் பிரிவின் கீழ்
தேர்வு செய்யப்பட்டு பயன்களைப் பெறலாம். எனினும் அட்டவணை இன (நஇ) ஒதுக்கீடு
சேர்க்கை இடங்கள், உயர் நீதிமன்ற ஆணைகளை பெற்ற பின்பு 27ஆம் தேதி அன்று
தான் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதுவரையில் அந்த சேர்க்கை இடங்கள்
நிரப்பப்படாது. எனவே அட்டவணை இனத்து (நஇ) சேர்க்கை ஒதுக்கீடு இடங்கள் பெற
வரும் மாணவர்கள் 27ஆம் தேதி சென்டாக் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில்
பங்கேற்க வேண்டும் என ராகேஷ் சந்திரா அந்த செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.