பணம் மட்டுமே வாழ்வல்ல! பணம் இருந்தால் எல்லாம் நடந்து விடும் என்று ஒரு
சாரர் நினைக்கிறார்கள். மார்க்க விதிகளுக்கு மாறாக, தாங்கள் சம்பாதிக்கும்
பணத்தில் குடி, விபச்சாரம் போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள்.
இறுதியில், பல நோய்களுக்கு ஆளாகி, 'இறைவா! என்னைச் சோதித்து விட்டாயே' என்று
புலம்புகிறார்கள்.குர்
ஆனில் சொல்லப்பட்டுள்ளதைக் கேளுங்கள்.* மக்கள் தங்கள் கைகளால் எதைச்
சம்பாதித்தார்களோ, அதன் (பணம்) காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும்
குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன.
* உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும்,
மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.
* மனிதனின் நிலை எப்படி இருக்கிறதெனில், அவனுடைய இறைவன் அவனைக் கண்ணியப்படுத்தி அருட் கொடைகளையும் வழங்கினால்,
'என்னுடைய
இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்' என்று கூறுகிறான்.மேலும், அவனை
சோதிக்க நாடினால், மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால்,
'என் இறைவன் என்னை இழிவு படுத்திவிட்டான்' என்று கூறுகிறான்.
இந்த போதனைகளை மனதில் கொண்டு, பணத்தின் மீதான பாசத்தைக் குறையுங்கள். பல பிரச்னைகளில் இருந்து தப்பி விடுவீர்கள்.