நன்றி LOGANATHAN SECRETARY TAMS SALEM.
இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான பனிப்பாறைகள் உண்டு. இந்த பனிப் பாறைகள் இமயத்தின் சுற்றுச்சூழலுக்கு அவசியம். அதுமட்டுமல்ல இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு நதி நீராக வருவதும் இந்த பனிப்பாறைகள் மெல்ல உருகுவதால் தான். இதற்கிடையில் ஐரோப்பிய புவி அறிவியல் சங்கம் (இ.ஜி.யு.) நடத்தும், 'தி க்ரையோஸ்பியர்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று இமயத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரவிருக்கும் பேராபத்தை கணித்துக் கூறியுள்ளது.எவரெட்ஸ் சிகரத்தை சுற்றியுள்ள பனிப்பாறைகள் இதே வேகத்தில் உருகுவது நீடித்தால், இன்னும் 85 ஆண்டுகளில் (2100 வாக்கில்), 70 முதல் 99 சதவீதம் வரை பனிப்பாறைகள் உருகி மாயமாகிவிடும் என்று எச்சரிக்கிறது அந்த கட்டுரை. பூமி வெப்பமாதலால் பனிப்பொழிவில் மாற்றம் நிகழ்வது, மழையின் அளவு மாறுபடுவது போன்றவற்றால் வரவிருக்கும் பாதிப்புகளை ஆய்வுகள் மூலம் கணிக்கும் வெகு சில கட்டுரைகளுள் இக்கட்டுரையும் ஒன்று.

நேபாளம்,
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்த
கட்டுரையை சமர்ப்பித்திருக்கின்றனர். எவரெஸ்ட் பகுதியில் 400 சதுர கி.மீ.,
பரப்பளவில் பல நதிகள் ஓடும் பகுதியை ஆய்வாளர்கள் ஆராய்ந்து பருவ நிலை
தகவல்களை சேகரித்திருக்கின்றனர். 'எவரெஸ்ட் பகுதியில் பனிப் பாறைகள் மெல்ல
உருகுவதால் தான் நேபாளம் வழியே இந்தியா வரும் கோசி நதியில் நல்ல நீர்வரத்து
இருக்கிறது' என்கிறார் ஆய்வுக் குழுவில் ஒருவரான ஜோசப் ஷியா. பனிப்பாறைகள்
வேகமாக உருகினால், ஆரம்பத்தில் நதிகளில் நீர் அதிகம் வருவது நல்லது போலத்
தெரியும்.
ஆனால் உருகும் வேகம் அதிகமானால் திடீர் வெள்ளங்கள் அடிக்கடி நிகழும். அணைக் கட்டுகள் பாதிக்கப்படும், பல ஆண்டுகள் கழித்து உருகுவதற்கு பனிப்பாறைகள் இல்லாமல் போய், வறட்சி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. 'எங்கள் ஆய்வு முடிவுகள் கணிப்புகள் தான்' என்று வல்லுனர்கள் சொன்னாலும், இமயமலை பகுதியில் இயற்கையின் சமநிலையை குலைக்காமல் இருப்பது இமயத்தை ஒட்டி வாழ்பவர்களின் கடமை.