எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்: கடும் போட்டி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்: கடும் போட்டி:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டிலும் (2015-16) மாணவர்களிடையே கடுமையான கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல்- வேதியியல்- இயற்பியல் ஆகிய கேள்வித்தாள்கள் எளிமையாக இருந்ததால், 132 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு (2015) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான மேலே குறிப்பிட்ட முக்கியப் பாடங்களின் கேள்வித் தாள்கள் சற்றே கடினமாக இருந்ததால், 17 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 எனினும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 37 பேர், 200-க்கு 199.50-இல் 57 பேர், 200-க்கு 199.25-இல் 67 பேர், 200-க்கு 199-இல் 100 பேர் என ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
விளைவு என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 12,944 மாணவர்களிடையே (41 சதவீதம் பேர்) கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ். சேர கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் வரிசை எண் 1292 முதல் 1627 வரை 336 மாணவர்கள், 197.25 என்ற ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.
 தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள் அடிப்படையில் அனைத்துப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவு என இரண்டிலும் சேர்த்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுதாய ரேங்க் எண் 1102 வரை எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது.
 இதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ரேங்க் எண் 1185 வரை (வரிசை எண் 1626) ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஐப் பெற்ற மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ரேங்க் எண் 1102-ஐத் தாண்டி இடம்பெற்றுள்ள அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 84 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
 எனினும் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் இடங்களில், சமுதாய ரேங்க் எண் 1102-ஐத் தாண்டி இடம்பெற்றுள்ள ஒரு சில மாணவர்களுக்கு படிப்பில் சேர இடம் கிடைக்கும்.
 ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்கள் குறித்த விவரம் அட்டவணையாக அளிக்கப்பட்டுள்ளது:
 கட்-ஆஃப் மதிப்பெண்           மாணவர்களின் எண்ணிக்கை
 200-க்கு 200                                     17
 200-க்கு 199.75                                37
 200-க்கு 199.50                                57
 200-க்கு 199.25                                67
 200-க்கு 199.00                                100
 200-க்கு 198.75                                107
 200-க்கு 198.50                                118
 200-க்கு 198.33                                    3
 200-க்கு 198.25                                144
 200-க்கு 198.00                                200
 200-க்கு 197.75                                237
 200-க்கு 197.67                                    1
 200-க்கு 197.50                                201
 200-க்கு 197.33                                    1
 200-க்கு 197.25                                336
 200-க்கு 197.00                                375
 200-க்கு 196.75                                345
 200-க்கு 196.67                                    1
 200-க்கு 196.50                                283
 200-க்கு 196.25                                310
 200-க்கு 196.00                                375
 200-க்கு 195.75                                324
 200-க்கு 195.67                                    2
 200-க்கு 195.50                                342
 200-க்கு 195.33                                    3
 200-க்கு 195.25                                346
 200-க்கு 195.00                                352
 200-க்கு 194.75                                287
 200-க்கு 194.50                                300
 200-க்கு 194.44                                    1
 200-க்கு 194.33                                    1
 200-க்கு 194.25                                313
 200-க்கு 194.00                                 291

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H