சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவனின் உடல் உறுப்புகளை தானம்
செய்த பெற்றோர், 'பைக் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்'
என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.
பொள்ளாச்சி, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்; ஜவுளி வியாபாரி. இவரது மனைவி மாசிலாமணி. இவர்களது மகன் செந்தில்குமார், ௨௧; மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்தார்.கடந்த ௧௩ம் தேதி, பொள்ளாச்சியில் நண்பரை சந்திக்க, உறவினருடன் பைக்கில் சென்றார். உறவினர் பைக்கை ஓட்ட, மாணவர் பின்னால் அமர்ந்திருந்தார். குமரன் நகர் செல்லும் வழியில், வேகத்தடை மீது பைக் ஏறியபோது, மாணவர் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.

பின்னந்தலையில்
காயமுற்ற அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும்
பலனின்றி, செந்தில்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது
இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாக
வழங்கப்பட்டன. மகன் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர், பைக் ஓட்டும்
அனைவருக்கும், உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
''விபத்தில் சிக்கிய எங்கள் மகன், பின் தலையில் அடிபட்டதால் உயிரிழந்தான். ஹெல்மெட் அணிந்திருந்தால், உயிர் பிழைத்திருப்பான். வேறு யாருக்கும் இத்தகைய துயரம் ஏற்படக்கூடாது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்,'' என, உருக்கமாக கூறினர்.