சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.)
மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), பொறியியல் (பி.இ.), பி.எஸ்ஸி
(விவசாயம்),பி.எஸ்சி (தோட்டக்கலை) ஆகிய தொழில் கல்வி படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க ஜூன் 12 கடைசி தேதியாகும்.இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக
நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொலைதூரக்கல்வி
இயக்கக படிப்பு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மருத்துவம் மற்றும் பல்
மருத்துவப் படிப்புக்கு ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்சி வேளாண்மை,
தோட்டக்கலை படிப்புக்கு ரூ.800 செலுத்தியும் (எஸ்.சி.,எஸ்.டி.
பிரிவினருக்கு ரூ.400) விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்து விண்ணப்பிக்கலாம்.
ஜூன் இறுதியில் கலந்தாய்வு: தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும்,
மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற
மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள், 12ஆம் வகுப்புத் தேர்வில் அவர்கள்
பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
கலந்தாய்வு ஜூன் இறுதியில் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதற்கான தேதி,
விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in
என்ற முகவரியை தொடர்பு கொண்டும், ஹன்ழ்ங்ஞ்ழ்ஃஹ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற
மின்னஞ்சல் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144 238348,
238349 ஆகியவற்றையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.







