இதுகுறித்து துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தது:
ஜூன் 27, 28-ல் கலந்தாய்வு: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக இணையதளத்திலும் அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு, ஒருமணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் (www.annamalaiuniversity.ac.in) தெரிந்து கொள்ளலாம். மேலும் auregr000ymail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்கள் 04144 238348, 238349 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.








