உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை காண வரும் சுற்றுலாபயணிகள் இன்று
முதல் இலவசமாக கம்பியில்லா இணைய சேவையான வைபை வசதியை பயன்படுத்த முடியும்.
முதல் அரை மணி நேரத்திற்கு இதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதன்பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தும்
வகையில் பல்வேறு சந்தா திட்டங்கள் உள்ளன. இதைப்பயன்படுத்தி தொடர்ந்து இந்த
சேவையை பெறமுடியும்.
அரசின் தொலைத் தொடர்பு
நிறுவனமான பி.எஸ்.என்.எல். சார்பில், வினாடிக்கு 100 மெகாபைட் வேகம் கொண்ட
இன்டர்நெட் சேவை வழங்கக்கூடிய வகையில் இந்த வைபை வசதி
உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 10
லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அனைத்து நகரங்கள் மற்றும்
சுற்றுலா மையங்களில் வைபை மூலம் இணையதள வசதியை ஏற்படுத்தும் பணிகளில் அரசு
தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி
மாதம் வாரணாசியில் இலவச வைபை வசதியை பிஎஸ்.என். எல் நிறுவனம்
ஏற்படுத்தியது. ஜெகன்னாத் பூரி உள்ளிட்ட வேறு சில முக்கிய பகுதிகளிலும்
மார்ச் 2016க்குள் வைபை வசதி ஏற்படுத்தி கொடுக்க அந்நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.







