இவர்களது வறிய
நிலையை அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இருவரின் கல்விச்
செலவுக்கு உதவுவதாக நேற்று தெரிவித்தார். இதேபோல் உத்தரபிரதேச
முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ், இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோரும்
இருவருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய
மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு, பிரிஜேஷ்–ராஜூ சகோதரர்கள்
படிப்பை தொடர முடியாத நிலை குறித்து ஊடகங்கள் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து,
அவர் டுவிட்டரில், ‘‘ஐ.ஐ.டி.யில் சேரும்போது சகோதரர்களின் நுழைவுக்
கட்டணம் ரத்து செய்யப்படும். இருவரும் ஏழ்மையான குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதால் கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர
கட்டணங்களுக்காக உதவித் தொகை பெறவும் தகுதியானவர்கள்’’ என்று
குறிப்பிட்டார்.