அதுக்கு முன்னாடி, சைவம்னா என்ன, அசைவம்னா என்னன்னு பார்த்துருவோமா?
தாவர வகைகளை மட்டும் சாப்பிட்டோம்னா அது சைவம். தாவர வகைகளோடு விலங்கின்
மாமிசத்தையும் சாப்பிட்டோம்னா அது அசைவம்.
சைவர்கள், அசைவர்கள்னு பிரிச்சுப் பார்க்கப் போனா அதுக்குள்ள சில வகையறாக்கள் இருக்கு.
Lacto Vegetarians : இவங்க முட்டையோ, மாமிசமோ சாப்பிட மாட்டாங்க. ஆனா, விலங்கிலிருந்து பெறப்படும் பால் குடிப்பாங்க.
Lacto-Ovo Vegetarians : இவங்க மாமிசம் சாப்பிட மாட்டாங்க. ஆனா, முட்டை சாப்பிடுவாங்க, பால் குடிப்பாங்க.
Ovo Vegetarians : இவங்க மாமிசம் சாப்பிட மாட்டாங்க, பால் குடிக்க மாட்டாங்க. ஆனா, முட்டை மட்டும் சாப்பிடுவாங்க.
Vegans : இவங்க முட்டை, மாமிசம் சாப்பிட மாட்டாங்க. பால் குடிக்க மாட்டாங்க. விலங்குகளிடம் இருந்து பெறப்படும் எதையும் பயன்படுத்தக் கூட மாட்டாங்க.
Dietary Vegans : இவங்க விலங்குகள்ல இருந்து பெறப்படும் உணவுகளை சாப்பிட மாட்டாங்க. ஆனா, விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் உடைகள், அணிகலன்களை அணிஞ்சுக்குவாங்க.
அசைவம்னு வரையறுக்குறதுல சில குழப்பங்கள் இருக்கு. பால் விலங்கிலிருந்துதானே கிடைக்குது, முட்டையில இருந்துதானே கோழி வருது அப்ப அதெல்லாம் அசைவம்தானேன்னும் கேள்வி கேட்கப்படுது.
ஒரு உயிரைக் கொன்றோ, அல்லது உயிருக்குக் கேடு விளைவித்தோ பெறப்படும் உணவுதான் அசைவம்னு பார்த்தா, தாவரங்களுக்கும் உயிர் இருக்கே, அப்ப தாவரங்களைச் சாப்பிடுறதும் அசைவம்தானேன்னும் கேள்வி கேட்கப்படுது.
சரி, இப்டீ வச்சுக்குவோம், இடம் பெயரும் உயிர்களைத் தின்றால் அசைவம். இடம் பெயரா உயிர்களைத் தின்றால் சைவம். தாவரங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி செய்யாதான்னா, Chlamydomonasங்குற ஒரு பச்சைப் பாசித் தாவரம் தானாகவே இடம் பெயரக்கூடியது. ஆனா, அதை நாம திங்கிறது இல்லை.
ஆக, இடம் பெயராத் தாவரங்களைத் தின்பது சைவம். இடம் பெயரும் விலங்குகளையோ அதன் விளைபொருட்களையோ தின்பது அசைவம். இப்ப முட்டைக்கு வருவோம். முட்டையாக இருக்கும் போது அது இடம் பெயர்வதில்லை. ஆனால், அதில் இடம் பெயரும் ஒரு உயிர் இருக்கின்றது. அதனால், அது அசைவத்தில் வரும் என்கிறார்கள்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நமக்கு கடையில கிடைக்கிற முட்டையில இருந்து கோழிக்குஞ்சு வராது. ஏன்னா, அது Unfertilized Egg. அப்டீன்னா, அது கோழியும் சேவலும் இணைசேர்ந்து உருவாகுற முட்டை இல்லை. முட்டை வியாபாரத்திற்காக சேவலோடு இணை சேராமல் கோழி இடும் முட்டைதான் அது. அதிலிருந்து கோழிக்குஞ்சு வரவே வராது.
அதனால், இந்த முட்டைகள் அசைவத்தில் சேராது என்பது என் கருத்து. ஆனால், மதம், கலாச்சாரம் சார்ந்து பார்ப்போர்கள் பார்வையில், இடம்பெயரும் உயிரினத்தில் இருந்து வரும் எதுவும் அசைவம் ஆகும்.
ஆக, எல்லாம் நம் மனவிருப்பப்படிதான். முட்டை சைவம் என்றால் சைவம், அசைவம் என்றால் அசைவம்.