இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 36.63 லட்சம் மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மட்டும் 12.92 லட்சம் மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு பள்ளிகளின் மூலம் மட்டுமில்லாமல், மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்தும் ஆன்-லைன் மூலம் கல்வித் தகுதியைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.