இதில் 6,792 பணியிடங்களுக்கு பெண் செவிலியர்களும், மீதம் உள்ள 451 பணியிடங்களுக்கு ஆண் செவிலியர்களும் தேர்வு செய்யட உள்ளனர். இந்தத் தேர்வில் பங்கேற்றவர்கள் பெற்ற மதிப்பெண் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தந்த பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை முதல் 10 வேலை நாள்களுக்கு இந்தப் பணிகள் நடைபெறும்.
இது குறித்து மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியது:
முதல் நாளில் 451 பேர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. வியாழக்கிழமை சான்றிதழ் சரிபார்ப்புக்கு 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்ததும், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுதொடர்பான சந்தேகம் அல்லது புகார் இருந்தால் அதனை mrb.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.








