Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மதுரை: அரசு பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் சேர்க்கை:
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு கல்வியாண்டில் மதுரையில் உள்ள அரசு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி
உள்ளது.மதுரை மாவட்டத்தில் 648 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளிகள், 207 நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு தொடக்கப்பள்ளி, 8 நகராட்சி
பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்
சேர்க்கை கடந்த ஆண்டை காட்டிலும் 1,834 பேர் வரை குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் முதல் மற்றும் 6-ம் வகுப்புகளில் இந்த ஆண்டு
நடைபெற்றுள்ள மாணவ, மாணவியர் சேர்க்கை விவரம்: அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்
கல்வியை பொருத்தவரையில், முதல் வகுப்பில் மாணவர்கள் 5,309 பேரும், மாணவிகள்
5,315 பேரும் என மொத்தம் 10,624 பேர் சேர்ந்துள்ளனர். ஆறாம் வகுப்பில்
2,452 மாணவர்களும், 2,575 மாணவிகளும் என மொத்தம் 5,027 பேர்
சேர்ந்துள்ளனர். ஆங்கிலவழிக் கல்வியை பொருத்தவரையில் முதல் வகுப்பில்
மாணவர்கள் 3,123 பேரும், மாணவிகள் 3,146 பேரும் என மொத்தம் 6,269 பேர்
சேர்ந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் தமிழ்வழிக் கல்வி முதல் வகுப்பில் மாணவர்கள் 6,637
பேரும், மாணவிகள் 6,767 பேரும் என மொத்தம் 13,404 பேர் சேர்ந்துள்ளனர்.
ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்கள் 2,882 பேரும், மாணவிகள் 3,101 பேரும் என
மொத்தம் 5,983 பேர் சேர்ந்துள்ளனர். ஆறாம் வகுப்பில் மாணவர்கள் 2,180
பேரும், மாணவிகள் 2,187 பேரும் என மொத்தம் 4,367 பேர் சேர்ந்துள்ளனர்.
இதன்படி, கடந்த கல்வியா ண்டில் 23,754 ஆக இருந்த சேர்க்கையானது, இந்த
கல்வியாண்டில் 21,920 பேர் ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது
1,834 ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல தொடர்ச்சியாக மாணவர் சேர்க்கை
குறைந்துகொண்டே வந்தால் அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி
விடும் எனக் கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) பார்த்தசாரதி
கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகத்தான்
பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








