ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை ஓராண்டாகக் குறைக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் வட்டாரவள மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், அங்கு பணியாற்றிய 380 பேர் வெளி மாவட்டங்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.








