இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித
அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science) ஒரு
வருட Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Trainees
உதவித்தொகை: மாதம் ரூ.10,000
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன்
Computer Data Processing & Operation மற்றும் Office Tools (MS Office
& E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
தகுதி: பி.காம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன்
Tally, Computer Data Processing & Operation மற்றும் Office Tools
(MS-Office & E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
தகுதி: முதல் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்சி அல்லது
பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Software மற்றும்
Hardware-களில் பராமரிப்பு பற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
The Institute of Mathematical Sciences,
4th Cross Road, CIT Campus,
Taramani, Chennai - 600113.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.imsc.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.







