பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு
பள்ளிகல்வித்துறை சார்பில் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே கடந்த சில
மாதங்களாக சிறு சிறு பிரச்னைகளுக்காக ஜாதி ரீதியாக மோதல்கள் ஏற்பட்டு,
பெரியவர்களிடையே மோதல் ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையம், கூமாபட்டி, திருத்தங்கல், சுந்தரபாண்டியம், வீரசோழன்,
சின்னையாபுரம் உட்பட மாணவர்களிடையே சமூக மோதல்கள் ஏற்பட்ட பள்ளிகளில்
பள்ளிகல்வித்துறை சார்பில் உளவியலாளர் கார்த்திக்கேயன் மூலம் கவுன்சிலிங்
வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் ஜாதி மோதல்களில்
ஈடுபடாமல் தவிர்க்க மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோருக்கு
கவுன்சிலிங்க் கொடுக்கப்படுகிறது.முதற்கட்டமாக சின்னையாபுரம், தேவசகாயம்
அன்னத்தாயம்மாள் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது ,என்றார்.







