ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம்
தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்
கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஆடி 18ஆம் நாள் பெருக்கு விழா கொண்டாடப்படுவதை
முன்னிட்டு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட்
22ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும்.
உள்ளுர் விடுமுறை நாளன்று கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் அவசர
அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தளவு ஊழியர்களோடு செயல்படும்
என்றார் ஆட்சியர்.







