நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்.எல்.பி., படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம்
நேற்று துவங்கியது.மூன்றாண்டு எல்.எல்.பி., பட்டப் படிப்புக்கு, உச்ச
நீதிமன்ற உத்தரவுப்படி, வயது வரம்பை நீக்கி, தமிழக அரசு
உத்தரவிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
வழக்குத் தொடரப்பட்டது. இதனால், விண்ணப்ப வினியோகத்தை அம்பேத்கர் பல்கலை
நிறுத்தி வைத்தது. இந்நிலையில், வயது வரம்பு நீக்கி, அரசு வெளியிட்ட
உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. அரசு சட்டக்
கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி., பட்டப் படிப்புக்கு,
தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியருக்கு 35 வயதும், மற்ற
சமூகத்தினருக்கு 30 வயதும் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலை வளாகத்திலுள்ள, சீர்மிகு சட்டக் கல்லூரியில்
நடத்தப்படும் எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்புக்கு, தலித், அருந்ததியர்
மற்றும் பழங்குடியினருக்கு, 27 வயதும், மற்ற சமூகத்தினருக்கு, 25 வயதும்
உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தப் படிப்புக்கான விண்ணப்ப
வினியோகம் நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை வழங்கப்படும். ஏற்கனவே
விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, பல்கலை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.தாத்தா கனவு தகர்ந்தது: வயது வரம்பை நீக்கி அரசு
உத்தரவிட்டதும், சட்டம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த, முதியவர்களும்
ஆர்வமாக களத்தில் குதித்தனர். 76 வயதான ஒருவர், முதல் ஆளாக வந்து,
துணைவேந்தரை சந்தித்து விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பித்தார்.
ஆனால், வயது வரம்பு மீண்டும் நிர்ணயிக்கப்பட்டு விட்டதால், தாத்தாக்களின்
கனவு தகர்ந்துள்ளது.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







