வயதான பெற்றோரை எந்த முதியோர் இல்லத்தில் தள்ளி விடலாம் என, பலர்
நினைக்கும் இந்த காலத்தில், செயலிழந்த கால்களையும், பார்வை குறைந்த
கண்களையும் கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞர், வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள,
அரசு வேலை வேண்டும் என, எதிர்பார்க்கிறார்.
கோவை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மல்லிகா தம்பதியின் ஒரே மகன் சங்கர சுப்ரமணியம், 29; பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி; ஆனால், ஞாபக சக்தி உண்டு.இவரால், உருவங்களை, நிழலாக மட்டுமே காண முடியும். ஆனால், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அபார ஆற்றல் உள்ளது; நுட்பமான ஞாபக சக்தியும் உள்ளது.தன் குறைகளை, தெளிவாக புரிந்துகொண்ட சங்கர சுப்ரமணியம், மனதை திடப்படுத்தி, மீதமுள்ள நிறைகளை பயன்படுத்தி, வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொண்டு வருகிறார். பிறர் படிப்பதை கேட்டு, 'ஸ்கிரைப்' முறையில் தேர்வு எழுதி, 10ம் வகுப்பு தேர்வில், 62 சதவீத மதிப்பெண் பெற்றார்.

'தங்க மாணவர்':
தமிழ்நாடு
திறந்த நிலை பல்கலையில், பி.ஏ., பொருளாதாரம் படித்து, முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார். இதன் பின்னணியில், இவரது ஏழை
தந்தை கிருஷ்ணமூர்த்தி அனுபவித்த சிரமங்களை, சொல்லி மாளாது.'படித்தது
போதும், ஏதாவது வேலை பார்த்து, இனியாவது, வயதான பெற்றோரை, பத்திரமாக
பார்த்துக் கொள்வோம்' என, 2013ல், டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், அரசு
பணியாளர் தேர்வாணையம் நடத்திய, புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு எழுதி,
தேர்ச்சி பெற்றார்; ஆனாலும், வேலை கிடைக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி., நிராகரிப்பு:
தளராத
சங்கர சுப்ரமணியம், 2014ல் எழுதிய, 'குரூப் - 4' தேர்விலும் தேர்ச்சி
பெற்று, ஊனமுற்றோர் தரவரிசை பட்டியலில், எட்டாம் இடத்தைப் பிடித்தும்,
நிராகரிக்கப்பட்டார். வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் என்பதை, 29 ஆண்டு
வாழ்க்கையில் உணர்ந்து விட்டவர், கடைசி முயற்சியாக, சமீபத்தில், கோவை
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, தன் கல்வித் தகுதி, உடல்
தகுதிக்கு ஏற்ப, ஏதாவது அரசு வேலை வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது ஆசை, பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்ற
துடிப்பை நிறைவேற்றுவது, முதல்வர் ஜெயலலிதாவின் கையில் தான் உள்ளது!