ஆசிரியர் தின விழா 100%தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆசிரியர் தின விழா 100%தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய சகாப்தமாக ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு,05.09.2015 ஆசிரியர் தினம்-டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று காலை 10மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது.1500க்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்ற ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் மாண்புமிகு ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் திரு ப.மோகன் அவர்களின் முன்னிலையிலும், மாண்புமிகு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.M.லக்ஷ்மி அவர்களின் தலைமையிலும்  விழா நடைபெற்றது. 
இந்நிகழ்வில் முதலாவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்விற்கு கள்ளக்குறிச்சி பாரளு மன்ற உறுப்பினர் திரு.டாக்டர் திரு.K.காமராஜ்,கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.அழகுவேல் பாபு,மற்றும் விழுப்புரம் மாவட்ட கோட்டாச்சியர் திருமதி R.பிருந்தா ஆகியோர்  கல்வித்துறையில் விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி பற்றியும் ஆசிரியர்களின்   கடமைகளை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி,விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு.N.இராசமாணிக்கம்,விழுப்புரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திரு.சீ.மாதவன்,திண்டிவனம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திரு.உஷேன்கான் , மற்றும் மாவட்டக் கல்வி ஆய்வாளர்கள்,மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திரு.பச்சையப்பன் ஆகியோர்  சிறப்புரை ஆற்றினார்கள்.மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் முதல் நிகழ்வாக மாண்புமிகு அமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு( 2015மார்ச்) 10மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற 25 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.பின்னர் 10மற்றும் 12ஆம் வகுப்பில் 100%தேர்ச்சியை தந்த 47 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100%தேர்ச்சி அளித்த 400 ஆசிரியர்கள் இந்த ஆண்டு 100% தேர்ச்சி அளித்த 1400 ஆசிரிகள்,90-99%தேர்ச்சியை தந்த 1500 ஆசிரியர்கள் என மொத்தம் 4567 சான்றிதழ்களை மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தன்னுடைய பள்ளி பருவத்தில் தன்னை ஊக்குவித்த ஆசிரியர்களை பற்றியும்,அவர்களின் தியாக உணர்வுகளை பற்றியும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.ஆசிரியர்களின் கடமைகள் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள் குறித்து கூறியவிதம் அருமை.அனைத்து ஆசிரிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்களின் நன்றி உரையுடன் விழாவானது மதியம் 01.30 மணியளவில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நேர்த்தியான முறையில் இருந்தது.இது போன்ற நிகழ்வின் வாயிலாக கண்டிப்பாக ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை...இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் 100% தேர்ச்சியை பெற கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.






Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H