Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்:
தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்:
தமிழகம் முழுவதும் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும்
பி.எட். கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட்.
சேர்ந்து படிக்க 1,777 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இளங்கலை மற்றும்
முதுகலை படித்து முடித்த பட்டதாரிகள் சேர்ந்து படிக்க கடந்த 3-ந்தேதி முதல்
10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் விண்ணப்பம்
வினியோகிக்கப்பட்டது.
கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள்
விற்பனையானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
நேற்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து, தமிழகம் முழுவதும்
விண்ணப்பங்களை வாங்கிய பட்டதாரிகள் விண்ணப்பங்களை நேற்று ஆர்வமுடன்
அனுப்பினார்கள்.
7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 7
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர்
பாரதி கூறியதாவது:-தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14
அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 21 பி.எட். கல்லூரிகள்
உள்ளன. இந்த 21 கல்லூரிகளில், 9 மகளிர் பி.எட். கல்லூரிகள், 4 ஆண்கள்
பி.எட். கல்லூரிகள், 8 இரு பாலரும் படிக்கக்கூடிய பி.எட். கல்லூரிகளும்
அடங்கும்.
இதில் மொத்தம் 1,777 இடங்கள் உள்ளன. இதில் ஆண்களுக்கு 717 இடங்களும்,
பெண்களுக்கு 1,060 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து990
விண்ணப்பங்கள் விற்பனையானதில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. நாளை தான் (அதாவது இன்று) சரியான
எண்ணிக்கை தெரிய வரும்.கலந்தாய்வு குறித்து வருகிற 16-ந்தேதி முதல்
18-ந்தேதிக்குள் அழைப்புக்கடிதம் மற்றும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம்
விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி
தொடங்கி, அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி
முதல் மாலை 5 மணி வரையிலும் என இரு நேரங்களிலும் கலந்தாய்வு நடத்த
திட்டமிட்டு இருக்கிறோம்.கடந்த ஆண்டு வரை பி.எட். படிப்பின் காலம் ஒரு
ஆண்டாக இருந்தது. ஆனால் இந்த வருடம் முதல் 2 ஆண்டுகளாக படிப்பின் காலத்தை
மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில தனியார் பி.எட்.
கல்லூரிகள் 2 வருடமாக மாற்றக்கூடாது என நீதிமன்றத்தை நாடியுள்ளன.ஆனால்
தற்போது 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில்(என்.சி.டி) விதிமுறைப்படி தயார்செய்யப்பட்டுள்ளது.அதே
போல், ஆசிரியர் பயிற்சியை 100 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








